Breaking News: இனி B.E படிப்புகளில் சேர - AICTE முக்கிய அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

Breaking News: இனி B.E படிப்புகளில் சேர – AICTE முக்கிய அறிவிப்பு..!!

 இனி (2022-23)  B.E படிப்புகளில் சேர –

 AICTE முக்கிய அறிவிப்பு..!!

பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு.

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE) வெளியிட்டுள்ளது. அதன்படி,குறிப்பிட்ட சில B.E பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE)அறிவித்துள்ளது.

குறிப்பாக,கட்டிடக்கலை,பயோடெக்னாலஜி மற்றும் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்று AICTE தெரிவித்துள்ளது.இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும்,கணினி அறிவியல்,மின்& மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும் AICTE அறிவித்துள்ளது.

Leave a Comment