BREAKING: தமிழகத்தில் 1முதல் 5 – வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு கிடையாது..!!

BREAKING: தமிழகத்தில் 1முதல் 5 – வகுப்புகளுக்கு

 இறுதித்தேர்வு கிடையாது..!!

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் கிடையாது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும்.

2022-23-ம் ஆண்டு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24-ம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13-ம் தேதி துவங்கும் என்றும் அதில் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment