Breaking:ஓய்வு பெரும் அரசு அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு..?? - Tamil Crowd (Health Care)

Breaking:ஓய்வு பெரும் அரசு அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு..??

 Breaking:ஓய்வு பெரும் அரசு அதிகாரிகளுக்கு – புதிய கட்டுப்பாடு: ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம்  CENTRAL VIGILANCE COMMISSIONஉத்தரவு..!

அரசு அதிகாரிகள்,ஓய்வு பெற்றவுடனே தனியார்துறைகளின் கீழ் உள்ள வேலைகளில் சேரக்கூடாது என்றும் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் CENTRAL VIGILANCE COMMISSION உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு,ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் CENTRAL VIGILANCE COMMISSION ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது,

ஓய்வு பெற்ற பிறகு தனியார் வேலையில் சேருவதற்கு ஒவ்வொரு அரசுத்துறையும் குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயித்துள்ளன.

 இந்த செய்தியையும் படிங்க…

 PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?

இந்நிலையில்,அந்த கால இடைவெளியை பின்பற்றாமல்,அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடனே அதிகாரிகள் சிலர்,தனியார் நிறுவனங்களில் முழு நேர பணி அல்லது ஒப்பந்த முறையில் பணிக்கு சேருகின்றனர். எனவே,அவ்வாறு தனியார் துறைகளில் வேலையில் சேருவது தவறான நடத்தை ஆகும்.

எனவே, ஓய்வு பெற்ற பிறகு தனியார் பணியில் சேருவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியை கட்டாயமாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசுத்துறைகளும் உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

அப்படி தனியார் பணியில் சேருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.அதன்படி,அந்த சான்றிதழ் இருந்தால்தான்,அவரை பணியில் சேர்க்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறி,தனியார் பணியில் உடனடியாக சேரும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விதிமுறையில் சில உட்பிரிவை சேர்க்க வேண்டும்.

ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பணி வழங்கும் நடைமுறை எந்தவிதமான ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும்.

மேலும்,அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு குறித்து விளம்பரப்படுத்த வேண்டும், என்று ஆணையம் கூறியுள்ளது.

Leave a Comment