BLACK FUNGI பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்..!! - Tamil Crowd (Health Care)

BLACK FUNGI பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்..!!

BLACK FUNGI பயங்கரம்: 2 சிறுமிகள்,1 சிறுவனின் கண்கள் அகற்றம்..!!

BLACK FUNGI நோயின் பயங்கரத்தினால் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என மூன்று பேரின் கண்கள் அகற்றப்பட்டுள்ளன. 4,6,14 ஆகிய வயதுடைய மூன்று பேருக்கும் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக மும்பை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!  

CORONA  இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும், இரண்டு சிறுமிகளுக்கும் BLACK FUNGI  தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அந்த BLACK FUNGI  மூளைக்கு சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முன்பாக மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு, மூன்று பேருக்கும் கண்களை அகற்றினர். தக்க நேரத்தில் கண்களை அகற்றியதால் மூன்று பேரின் உயிரையும் காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

CORONA தொற்று பாதித்தவர்கள் அத்தொற்றில் இருந்து மீண்டாலும் BLACK FUNGI தொற்று அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். BLACK FUNGI, WHITE FUNGI, YELLOW FUNGI  என்று எல்லாம் வந்து இப்போது இந்தியாவில் ‘ஆஸ்பர்கில்லோசிஸ்‘எனும் GREEN FUNGI-யும் வந்து அச்சுறுத்தி வருகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 முடி உதிராமல் இருக்க  – சில வழிமுறைகள் !!

இந்தியாவில் முதன்முறையாக ஒரு இளைஞர் இந்த GREEN FUNGI தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த 34 வயது அந்த இளைஞர், விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment