#BanNeet: ” பிரதமர் ஆகுறதுக்கும் ஒரு தேர்வு வச்சிருந்தா, நாடு நல்லாருந்துருக்கும்.” -ஒன்றிய உயிரினங்கள்..!!
DMK ஆட்சிக்கு வந்தால், NEET தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் என்று குறிப்பிட்டிருந்தது.. அந்த வகையில் தற்போது DMK ஆட்சி அமைந்தவுடன், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் NEET தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
JUNE 21 சர்வதேச யோகா தினம்: மத்திய கலாச்சார அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் NEET தேர்வு முறையானதா, சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் NEET தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வருகின்ற 23-ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை neetimpact2021@gmail.com என்ற இமெயில் வழியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தெரிவிக்கலாம் என குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாஜக அரசின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக டைனோசர், மாடு, சிங்கம், புலி, காண்டா மிருகம், பாம்பு, ஒட்டகசிவிங்கி, அனகொண்டா என்று விலங்குகள் பெயரில் ட்விட்டர் கணக்கை ஓபன் செய்து பாஜகவை கலாய்த்து வந்தனர் நெட்டிசன்கள்.. மேலும் கடந்த 2 நாட்களாக #ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டாகை ட்ரெண்ட் செய்தும் வந்தனர்..
இந்நிலையில் இதுகுறித்த விவாதம் ட்விட்டரில் நடைபெற்று வருகிறது.. ஒன்றிய உயிரினங்களில் இருந்து ஒன்றான டைனோசர் என்ற ட்விட்டர் பயனாளர் ” பிரதமர் ஆகுறதுக்கும் ஒரு தேர்வு வச்சிருந்தா, நாடு நல்லாருந்துருக்கும்.. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
e-Pan Card 5 நிமிடத்தில் பெறும் எளிய வழிமுறைகள்..!!
இதற்கு பதிலளித்த கருங்குரங்கு என்ற ட்விட்டர் கணக்கில் ” பிரதமர் ஆகுறதுக்கு தேர்வு கூட வேணாம் ,தேர்வு எழுதி அவரு வாங்கின சர்டிபிகேட் மட்டும் காட்ட சொல்லுங்க போதும்.” என்று பதிவிட்டுள்ளார்..
இதே போல் பலரும் கண்டிப்பாக நுழைவுத்தேர்வு அவசியம். ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்..” என்று பதிவிட்டு வருகின்றனர்.. #BanNeet என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது..