Bank Holiday: மே மாதத்தில் வங்கிகளுக்கு- எவ்வளவு நாள் விடுமுறை..?? - Tamil Crowd (Health Care)

Bank Holiday: மே மாதத்தில் வங்கிகளுக்கு- எவ்வளவு நாள் விடுமுறை..??

 Bank Holiday: மே மாதத்தில் வங்கிகளுக்கு- எவ்வளவு நாள் விடுமுறை..??

மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள். பல்வேறு வங்கி விடுமுறைகள் காரணமாக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள், 2021 மே மாதத்தில் 12 நாட்கள் மூடப்படும். விடுமுறைகள் தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவது ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

 தமிழகத்தில் நாளை முதல் வங்கி சேவை -நேரம் குறைப்பு..!! 

அனைத்து மாநிலங்களுக்கும் வெவ்வேறு விதிகள்

ரிசர்வ் வங்கியின் (RBI) வலைத்தளத்தின்படி, மே மாதத்தில் மொத்தம் 5 நாட்களுக்கு வங்கி (Banks) மூடப்படும் ( Bank Holidays List May 2021). இருப்பினும், ரிசர்வ் வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில், சில விடுமுறைகள் உள்ளூர் மாநில அளவில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எல்லா மாநிலங்களிலும் 5 நாள் விடுமுறை இருக்காது என்பதை விளக்கி உள்ளது.

எந்தெந்த தினங்களில் வங்கிகள் செயல்படாது?

வங்கி விடுமுறை தவிர, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மே 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இந்த நாளில் வங்கிகளில் இயங்காது. இது தவிர, மே 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் உள்ளன.

கொரோனா காரணமாக வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும்

நாட்டில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளின் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் (IBA) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கியைத் திறக்க அறிவுறுத்தியுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க….

SBI Alert: ஏடிஎம்(ATM)-ல் கார்டை நுழைக்கும் முன் இதை உறுதிப்படுத்துங்க!| 

அதாவது, இப்போது வங்கிகள் பொது மக்களின் வேலைக்கு 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் என்று கூறியுள்ளது.

Leave a Comment