B.Ed., M.Ed., பருவத்தேர்வுகள் - வரும் 28ம் தேதி துவக்கம்..!! - Tamil Crowd (Health Care)

B.Ed., M.Ed., பருவத்தேர்வுகள் – வரும் 28ம் தேதி துவக்கம்..!!

B.Ed., M.Ed.,  பருவத்தேர்வுகள் – வரும் 28ம் தேதி துவக்கம்..!!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், அனைத்து கல்லுாரிகளை சேர்ந்த B.Ed., M.Ed., மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இணையம் வழியாக, 28ம் தேதி துவங்கி பிரிவு வாரியாக, July  15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.தேர்வு சமயத்தில் மாணவர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற வழிகாட்டு நடைமுறைகள் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…   

 மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு -வரும் ஜுலையில் பள்ளிகள் தொடங்கப்படலாம்..!!

  1. தேர்வுக்கு முன்பே உரிய இன்டர்நெட், மொபைல், கம்பயூட்டர் வசதிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். 
  2. தேர்வுக்கு தேவையான ஏ4 வெள்ளைத்தாள் போதிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. கருப்பு நிற பந்து முனை பேனாவை பயன்படுத்த வேண்டும்.
  4. ஒவ்வொரு தேர்வையும், 40 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். 
  5. கல்லுாரி முதல்வரிடம் இருந்து பெறப்பட்ட, முகப்பு பகுதியை தேவையான அளவு பிரதியெடுத்துக் கொண்டு, முழுமையாக பூர்த்தி செய்து ஒவ்வொரு தேர்வின் முகப்பு பக்கத்தில் இணைக்க வேண்டும்.
  6. தேர்வு சமயத்தில் சிக்கல்களை தவிர்க்க, முதல்வர் அறிக்கும் நேரத்தில் மாதிரி தேர்வை வாட்ஸ்ஆப் செயலி பயன்படுத்தி எழுதிபார்க்க வேண்டும். 
  7. குறிப்பிட்ட நேரத்தில் எழுதி முடிக்க பயிற்சி எடுக்க வேண்டும்.
  8.  பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு, ‘ஸ்கிரைப்’ வசதியை கல்லுாரி முதல்வர் ஏற்பாடு செய்வார். 
  9. தாமாக ஏற்பாடு செய்ய விரும்புவோர், முதல்வரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  10. தேர்வுக்கான வருகையை மாணவர்கள் காலை அமர்வில், 9:30 முதல் 10:00 மணிக்குள்ளும், மதிய அமர்வை 1.30 மணி முதல் 2:00 மணிக்குள்ளும் பெயர், பதிவு எண் விபரங்களை வாட்ஸ்ஆப் மூலம் முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும்.
  11. ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன், ஒரு மணி நேரத்தில் விடைத்தாளை ஸ்கேன் செய்து, இ-மெயில், வாட்ஸ்ஆப் மூலம் பி.டி.எப்., வடிவில் அனுப்பிவைக்க வேண்டும். 
  12. தேர்வுகள் முடிந்ததும், தேர்வு இறுதிநாள் அல்லது மறுநாள் விரைவு அல்லது பதிவு தபால் மூலம் கல்லுாரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  13. முழுமையான விபரங்களுக்கு, http://www.tnteu.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
இந்த செய்தியையும் படிங்க…  
 

Leave a Comment