B.Ed., M.Ed., படிப்புகளுக்கான பருவத் தேர்வு JUNE 28-ம் தேதி தொடக்கம்..!!
B.Ed., M.Ed., படிப்புகளுக்கான பருவத் தேர்வு June 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் (Teachers Education University) அறிவித்துள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
JUNE 21 சர்வதேச யோகா தினம்: மத்திய கலாச்சார அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed., M.Ed., படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தேர்வு July-யில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் June 21 திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.
இந்த நிலையில், தேர்வுக்கான அட்டவணையை ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,B.Ed., M.Ed., 2-ஆம் ஆண்டுக்கான தேர்வு மற்றும் அரியா் பாடங்களுக்கான தேர்வு June 28-ஆம் தேதி தொடங்கி July 5-ஆம் தேதி வரை Online- ல் நடைபெறவுள்ளது. மாணவா்கள் தேர்வுக்கான அட்டவணையை http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/FINAL%20TIME%20TABLE%202021.pdf.pdf என்ற லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.