ANNA UNIVERSITY மறுதேர்வு ஜூன் 14ல் துவக்கம்-பொன்முடி..!!
Anna University நடத்திய செமஸ்டர்(Semester) தேர்வுகளில் பிரச்னைகள் இருந்ததால், மீண்டும் தேர்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். மூன்று மணி நேரம்அதன்படி, மறுதேர்வுகள் ஜூன் 14ல் துவங்க உள்ளன. மற்ற பல்கலைகள் நடத்தியது போல, இந்த தேர்வுகள் ‘On Line’ வழியில் மூன்று மணி நேரம் நடக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்- ஆசிரியர்களுக்கு வகுக்கப்படாதது ஏன்..??
பி.இ(BE)., – பி.டெக்(B.Tech).,
ANNA UNIVERSITITY அண்ணா பல்கலையின் 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தில், பி.இ(BE)., – பி.டெக்(B.Tech)., இன்ஜினியரிங்(Engineering) படிக்கும் மாணவர்களுக்கு, ஜூன் 14ல் செமஸ்டர் தேர்வு துவங்கி ஜூலை 10ல் முடியும்.
M.Tech., – ME.,
முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, ஜூன் 14ல் தேர்வுகள் துவங்கி, ஜூலை 14ல் முடியும். கடந்த 2013ம் ஆண்டு இளநிலை பாடத் திட்ட மாணவர்களுக்கு, ஜூன் 14 முதல், ஜூலை 16 வரை தேர்வுகள் நடக்கும். ஏற்கனவே நடந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்தியவர்கள், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டாம்.
இளநிலை, முதுநிலையில் 2013க்கு முந்தைய பாடத் திட்டத்தை படித்தவர்களுக்கு, ஜூன் 21 முதல், ஜூலை 30 வரை தேர்வுகள் நடத்தப்படும். இந்த அரியர் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள், ஜூன் 3க்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.
On Line Exams:
மாணவர்களின் உயிரும் முக்கியம், தேர்வும் முக்கியம் என்ற அடிப்படையில், இந்த தேர்வுகளை On Line லேயே நடத்த திட்டமிட்டுள்ளோம். மற்ற பல்கலைகள் அண்ணா பல்கலை(Anna University) தவிர, மற்ற கலை, அறிவியல் (Art & Science University)பல்கலைகளின் மாணவர்களுக்கு, இறுதி மற்றும் அரியர் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும், ஜூன் 15ல் துவங்கி, ஜூலை 15க்குள் முடிக்கப்படும்.
கல்லுாரி பேராசிரியர்களின் ஊதியம் குறைக்கப்படாது:
ஜூலை 30க்குள் ரிசல்ட் வெளியிட, பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.கல்லுாரி பேராசிரியர்களின் ஊதியம் குறைக்கப்படாது; வழக்கமான ஊதியம் பெறுவார்கள். NEET தேர்வு ரத்து குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
On Line வகுப்பில் தவறுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோடை விடுமுறைகொரோனா தொற்று காலத்தில், கோடை விடுமுறையை மாணவர்கள் அனுபவிக்க முடியாமல் உள்ளதை நாங்கள் அறிகிறோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, மக்களின் இயல்பான வாழ்க்கையை மீட்க, முதல்வர் எல்லா நேரமும் யோசித்து பணியாற்றுகிறார். பொதுமக்களும், மாணவர்களும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு பொன்முடி கூறினார்.