ஆகஸ்ட் 1-முதல் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்; மீண்டும் M.Phil., படிப்பு நடத்தப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் ..!! - Tamil Crowd (Health Care)

ஆகஸ்ட் 1-முதல் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்; மீண்டும் M.Phil., படிப்பு நடத்தப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் ..!!

 ஆகஸ்ட் 1-முதல் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்; மீண்டும் M.Phil., படிப்பு நடத்தப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் ..!!

சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் M.Phil.,  படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் , உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த செய்தியையும் படிங்க… 

 பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் – ஆளுநர் அதிரடி உத்தரவு..!! 

அத்துடன் இந்த ஆலோசனையில் 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் PLUS TWO  மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறை மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 இந்நிலையில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் குறித்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ‘துணைவேந்தர் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிப்படையான தன்மையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும். 

அதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 1- முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்.

இந்த செய்தியையும் படிங்க… 

 Breaking:அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்  – இன்று முதல் அமல்..!! 

 ஆகஸ்ட் 1க்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.அனைத்து பல்கலைக்கழகங்களும் M.Phil., படிப்பை தொடர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment