தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!
தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியபடியே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே.
இந்த செய்தியையும் படிங்க…
புதிய 9 மாவட்டங்கள்: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கும் திமுக, அதிமுக நிர்வாகிகள்..!!
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிகிறது.
கோவை,
நீலகிரி,
தேனி,
சேலம்,
தருமபுரி,
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம்
ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
அதேபோல் கடந்த சில மாதங்களாக வெயிலின் கொடுமையால் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது மழை பெய்து வருவதால் நிம்மதியைத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.