MBBS:அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி-உச்சநீதிமன்றம்..!!
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து- முதல்வர் ஸ்டாலின் பதில்..!!
இந்த நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.