SBI வங்கியில் வீட்டு கடன் வாங்குவோருக்கு: ஆகஸ்ட்-31 வரை சலுகை கிடைக்கும்..!!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் SBI வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
மழைக்கால சலுகை:
அந்தவகையில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘Monsoon Dhamaka’ என்ற பெயரில் மழைக்கால சலுகை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யபடும் என தெரிவித்துள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
AUGUST-1: ATM, Credit, Debit Card பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமல்- Reserve Bank அறிவிப்பு..!!
ஆகஸ்ட் 31 வரை பிராசஸிங் கட்டணம் இல்லை:
இதுகுறித்து SBI வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், SBI வங்கியில் இதற்கு முன்னதாக வீட்டு கடன்களுக்கு 0.40% பிராசஸிங் கட்டணம் வசூலித்தது. ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இந்த கட்டணம் தேவை இல்லை. இதனால் வீடு வாங்குவோருக்கு இது நிம்மதியளிக்கும். SBI வங்கியின் இந்த மழைகால சலுகையால் வீடு வாங்க திட்டமிட்டிருபோருக்கு சலுகை கிடைக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.