PM Awas Yojana Scheme: இனி வீடு கட்ட மானியத்துடன் காப்பீடும் சேர்ந்து கிடைக்கும்..?? - Tamil Crowd (Health Care)

PM Awas Yojana Scheme: இனி வீடு கட்ட மானியத்துடன் காப்பீடும் சேர்ந்து கிடைக்கும்..??

 PM Awas Yojana Scheme: இனி வீடு கட்ட மானியத்துடன் காப்பீடும் சேர்ந்து கிடைக்கும்..??

PM Awas Yojana Scheme:

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் PM Awas Yojana Scheme இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி வழங்கப்படுகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 AUGUST-1: ATM, Credit, Debit Card பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமல்- Reserve Bank அறிவிப்பு..!! 

வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம்:

2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

காப்பீடு வழங்க ஆலோசனை :

இந்நிலையில், Pradhan Mantri Awas Yojana திட்டத்தில் பயன்பெறுவோருக்கு மேலும் ஒரு சலுகை கிடைக்க விருக்கிறது. அதாவது Awas Yojana திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் திடீரென இறந்துவிட்டாலோ அல்லது விபத்து போன்றவற்றால் உடலில் குறைபாடு ஏற்பட்டாலோ அவர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கான கோரிக்கையை இந்திய தொழில் துறை கூட்டமைப்பு அரசிடம் வைத்துள்ளது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டால் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இனி வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியும் கிடைக்கும்.

Leave a Comment