ATM கார்டு இல்லாமல் வங்கியில் பணம் எடுக்க: ‘Cardless cash withdrawal’ திட்டம்..!!
ATM கார்டு இல்லாமல் வங்கியில் HDFC பணம் எடுக்க: ‘Cardless cash withdrawal’ திட்டம்:
ATM கார்டு இல்லாமல் பணம் தேவைப்படும் நேரங்களில் HDFC வங்கி ‘Cardless cash withdrawal’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
HDFC வங்கி Debit Card இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. இதுகுறித்து HDFC வங்கியின் டிவிட்டர் பதிவில்,
வாடிக்கையாளர்கள் அனைவரும் கார்டு இல்லாமலேயே உடனடியாகவும், பாதுகாப்பாகவும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். அல்லது மாதம் 25,000 ரூபாய் வரை ஏடுத்துக்கொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி..??
- HDFC வங்கியின் இணைய வங்கியினை Login செய்து கொள்ளுங்கள்.
- அதில் fund transfer என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு from என்ற ஆப்சனுக்கு நேராக உங்களது வங்கிக் கணக்கினை தேர்தெடுக்கவும். அதன் பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அதனை இரண்டாவது பாக்ஸில் கொடுத்து கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு எவ்வளவு தொகை அனுப்ப போகிறீர்கள் என்பதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு confirm என்பதை கொடுக்கவும்.
- இதன் பிறகு யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு SMS போகும். அதனை வைத்து அருகிலுள்ள ATM சென்று Withdraw செய்து கொள்ளலாம்.
- எனினும் இவ்வாறு கொடுக்கப்படும் request ஆனது 24 மணி நேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
- பணத்தினை பெற்றவர் ATM-ல் சென்று பணத்தினை எடுக்க, அவரது மொபைல் எண்ணுக்கு 4 இலக்க OTP-ம் மற்றும் 9 இலக்க ID-யினை பெறுவர்.
- HDFC ATM-மிற்கு சென்று cardless cash என்ற ஆப்சனை தேர்தெடுக்கவும். அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த OTP மற்றும் IDயை கொடுத்து, எவ்வளவு தொகை என்பதையும் கொடுக்க வேண்டும். உங்களது விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ATM-ல் பணம் எடுக்க முடியும்.