தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இதற்கு தடை -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
12 பொருட்கள் பயன்படுத்தலாம் :
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 2019ம் ஆண்டு ஜனவரி முதல், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், அதை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக பாக்கு மர இலை, அலுமினியத்தாள், வாழை இலை, உலோகத்தாலான பாத்திரங்கள், மரப்பொருட்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட 12 பொருட்கள் பயன்படுத்தலாம் என அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
உரிமம் ரத்து செய்யப்படும் :
இருப்பினும் அரசின் தடையை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து வருவது வழக்கமான ஒன்றாக மாறியது. இதனால் சென்னை மாநகராட்சி, ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
அபராதத் தொகை:
அத்துடன், அதற்கான அபராதத் தொகை குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தது. சில நாட்களுக்கு முன்பு, 1,390 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
தடை விதிக்கப்படும்:
இந்நிலையில், 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் 2023ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.