2021-2022 : Sep. 8 முதல் வேளாண்மைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்..!! - Tamil Crowd (Health Care)

2021-2022 : Sep. 8 முதல் வேளாண்மைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

 2021-2022 : Sep. 8 முதல் வேளாண்மைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

இளங்கலை & முதுகலை NEET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டு முதல் வேளாண்மை, தோட்டக்கலை பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளன. கோவை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த தமிழ் வழி படிப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த செய்தியையும் படிங்க…

கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : தமிழக அரசு..!! 

மேலும் நடப்பு கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தோட்டக்கலைக் கல்லூரி, கரூர், நாகை மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள 3 வேளாண்மைக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக மாணவர் சேர்க்கைப் பிரிவு தலைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment