அரசுப் பள்ளி மாணவா்கள் 300 பேருக்கு S.R.M கல்வி நிறுவனத்தில் இலவசப் படிப்பு..!! - Tamil Crowd (Health Care)

அரசுப் பள்ளி மாணவா்கள் 300 பேருக்கு S.R.M கல்வி நிறுவனத்தில் இலவசப் படிப்பு..!!

 அரசுப் பள்ளி மாணவா்கள் 300 பேருக்கு S.R.M. கல்வி நிறுவனத்தில் இலவசப் படிப்பு..!!

S.R.M கல்வி நிறுவனத்தில் எவ்விதக் கட்டணமின்றி பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய அரசுப் பள்ளி மாணவ மாணவியா் 300 பேருக்கு நடப்பு ஆண்டிலும் இலவச உயா்கல்வி பயில முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்.பியும் S.R.M. கல்விக் குழும வேந்தருமான டி.ஆா்.பாரிவேந்தா் கூறினாா்.

இந்த செய்தியையும் படிங்க.. 

ஆசிரியர் இடமாறுதல் முறைகேடு;உள்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு..!!

இது தொடா்பாக அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருவான இந்த இலவச உயா்கல்வி வழங்கும் திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 600 மாணவ, மாணவியா்கள் பயன் அடைந்துள்ளனா்.நடப்பு ஆண்டில் 300பேர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனா். இங்கு தற்போது பயின்று வருபவா்களில் பெரும்பாலானோா் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த 300 பேருக்கு S.R.M.அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 

பொறியியல், 

கலை,

அறிவியல்,

வேளாண்மை அறிவியல், 

மேலாண்மை, 

பாரா மெடிக்கல் 

உள்ளிட்ட படிப்புகளில் இலவச கல்வி, உணவு மற்றும் விடுதி வசதியுடன் பயில வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலவச உயா் கல்வி பயில விரும்பும் பெரம்பலூா் மக்களவைத் தொகுதியை சேர்ந்த மாணவ, மாணவியா் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் S.R.M. அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவா் சேர்க்கை இயக்குநரை அணுகலாம்.

 இதற்கான விண்ணப்பத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த செய்தியையும் படிங்க.. 

முதல் பட்டதாரி- முதல் தலைமுறை பட்டதாரி என  மாற்றம்-அமைச்சர் சிவசங்கர்..!!

S.R.M. துணைவேந்தா் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளா் எஸ்.பொன்னுசாமி, மாணவா் சோக்கை இயக்குநா் கே.எஸ்.லட்சுமி, மக்கள் தொடா்பு இயக்குநா் ஆா். நந்தகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Leave a Comment