LLR, LICENCE புதுப்பிக்க புதிய முறை அமல்; அமைச்சர் தகவல்..!!
சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:
* ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் புதிதாக 2,213 டீசல் பேருந்துகள் மற்றும் காற்றுமாசை குறைப்பதற்காக 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
* அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இயக்க வருவாயை தவிர கூடுதல் வருவாய்க்காக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
* ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளான பழகுனர் உரிமம் (LLR), ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் (Licence), ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த செய்தியையும் படிங்க..
ஆசிரியர் இடமாறுதல் முறைகேடு;உள்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு..!!
* திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு (பகுதி அலுவலகம்) ரூ.302.15 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
* பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் ஓட்டுனர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டிடம் மதுரை மாவட்டம் (மதுரை தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ரூ.528 லட்சம் செலவில் கட்டப்படும்.
* பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடம் கோவை மாவட்டம் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ரூ.498 லட்சத்தில் கட்டப்படும்.
* போக்குவரத்துத் துறையில் உட்தணிக்கை பணிகளை மேற்கொண்டு வரும் தணிக்கை அலுவலர்கள் தணிகை பணியினை மேற்கொள்ளவும், வாகன் மற்றும் சாரதி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும் ஏதுவாக 16 மடிக்கணினிகள் அதற்கான இணைய இணைப்பு வழங்கும் டேட்டா கார்டு 17.92 லட்சம் செலவில் வழங்கப்படும்.
* போக்குவரத்துத்துறையில் கணினி பயன்படுத்தும் நிலையில் பதிவுரை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் ஓட்டுனர் தவிர 1583 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
* ஏற்கனவே 504 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சோதனை சாவடிகளின் பணிகளும் online செய்ய இருப்பதாலும், தற்போதைய தொழில்நுட்பத்தினை மீதமுள்ள பணியாளர்களுக்கும் கணினிகள் மற்றும் அச்சுபொறிகள் ரூ.291 லட்சம் செலவில் வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.