அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம்: அமைச்சர்..!! - Tamil Crowd (Health Care)

அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம்: அமைச்சர்..!!

 அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம்:  அமைச்சர்..!!

தமிழக அரசு கல்வி நிறுவனங்களில், அரசுப் பணியிடங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்,சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்தச் சட்டம் கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த செய்தியையும் படிங்க.. 

ஆசிரியர் இடமாறுதல் முறைகேடு;உள்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு..!!

 மாணவர் சேர்க்கையில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்த நிலையில், தற்போது அரசுப்பணியிடங்களில் இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற் காக, அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டத்தை திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் அதற்கு இணையான தேர்வில், தமிழைஒரு மொழியாக கொண்டு தேர்ச்சியடையாத விண்ணப்பதாரரின் அடிப்படை தமிழ்மொழித் திறனைசோதிக்க, இரண்டாம் வகுப்புமொழித் தேர்வானது, தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு இதில் உள்ள எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் திருத்தப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திருத்தம்:

தொடர்ந்து 2017-ல் துறை சார்ந்த தேர்வுகள் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைப்படி, மொழித்தேர்வின் பாடத்திட்டம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில், அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத் துள்ளது.

மேலும் வாய்மொழித் தேர்வில்,சொல்லோட்டமாகவும் சரிநிலையாகவும் தமிழில் உரையாடுவதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60 லிருந்து, 50 ஆக குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றுசட்டப்பேரவையில், இரண்டு திருத்தங்களுக்கான சட்டமசோதாக்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

இந்த செய்தியையும் படிங்க.. 

முதல் பட்டதாரி- முதல் தலைமுறை பட்டதாரி என  மாற்றம்-அமைச்சர் சிவசங்கர்..!!

நிலம் கையகப்படுத்தல்:

அதேபோல், தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, நிலத்தைகையகப்படுத்துதலில் இருந்துதிரும்ப பெறுதல், விதிகளை செய்தல் ஆகிய அதிகாரங்களை தவிர, மாவட்ட ஆட்சியருக்கு சட்டப்படியான அனைத்து அதிகாரங் களையும் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.

Leave a Comment