வருங்கால வைப்பு நிதி- இணைய வழியில் பென்ஷன் தொகையினை கோரி பெற எளிய முறை அறிமுகம்..!!
வருங்கால வைப்புநிதி அமைப்பு அறிமுகம்:
தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் புதிய வசதியை ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு வேண்டிய நபர் வைப்பு நிதியிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு இணையவழி பரிந்துரை முறையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் மிஹர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையவழியில் பரிந்துரை செய்யும் அம்சத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதி வைத்துள்ள நபர் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி எளிய முறையில் தனக்கு வேண்டிய நபர்களை பரிந்துரைக்கலாம்.
மிஹர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
பணத்தை திரும்பப் பெறும்போது வருங்கால வைப்பு நிதி வைத்துள்ள நபரின் பாதிப்பு அல்லது மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தை சேர்ந்த நபர்கள் குறிப்பிட்ட நபரின் வைப்பு நிதி கணக்கில் பரிந்துரைக்கப்படாததற்காக அலைகழிக்கப்படுவார்கள்.
இணைய வழியில் பதிவு செய்யும் முறை :
ஆனால் புதிய முறையின் மூலம் வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் தொலைபேசி எண் UAN மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் எளிதில் செட்டில்மெண்ட் தொகையினைப் பெறலாம். இணைய வழியில் பதிவு செய்யும் முறை எளிமையானது. அதனால் அனைத்து உறுப்பினர்களும் விரைவில் இணையவழி பரிந்துரையினை விரைவில் செய்து முடிக்க வேண்டும்.
இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி வைத்துள்ள நபர் அல்லது பயனாளர் எளிதில் இணைய வழியில் பென்ஷன் தொகையினை கோரி பெறமுடியும் மற்றும் இறப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உறுப்பினரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் செட்டில்மெண்ட் தொகையினை எளிதில் கோர முடியும். இந்த இணையவழி பரிந்துரையை செய்திருந்தால் எந்தவொரு விண்ணப்பங்களையும் நிறுவனங்களுக்கோ அல்லது முன்னாள் நிறுவனங்களுக்கோ பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.