Railway Jobs: 10th pass; 3366 பணியிடங்களுக்கு ரயில்வேயில் வேலை..!!
இந்திய ரயில்வே வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, பத்தாம் (10th) வகுப்புப் படித்தவர்களுக்கு ரயில்வேயின் ஹவுரா, சீல்டா, அசன்சோல், மால்டா, காஞ்ச்ராபரா, லில்வா மற்றும் ஜமால்பூர் பிரிவுகளில் உள்ள பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.
கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு பம்பர் ஆட்சேர்ப்பு எடுக்கப்பட்டுள்ளது. 3366 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். அறிவிப்பின் படி, ரயில்வேயின்
ஹவுரா,
சீல்டா,
அசன்சோல்,
மால்டா,
காஞ்ச்ராபரா,
லிலுவா மற்றும்
ஜமால்பூர்
பிரிவுகளில் அப்ரெண்டிஸ்ஷிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு (Indian Railway Recruitment 2021) விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்திய ரயில்வேயின் www.rrcer.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அக்டோபர் 4ம் தேதியன்று தொடங்குகிறது. 2021 நவம்பர் 3ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படை கல்வித் தகுதியாகும்.
வயது:
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்ச வயது 24. தகுதியின் அடிப்படையில் பயிற்சிக்கு பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பொதுப் பிரிவினர் 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWBD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
எந்த பகுதிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:
மால்டா பிரிவு – 100 பணியிடங்கள்
காஞ்சராபர பிரிவு – 190 பணியிடங்கள்
லிலுவா பிரிவு – 204 பணியிடங்கள்
ஜமால்பூர் பிரிவு – 678 பணியிடங்கள்
ஹராரா பிரிவு – 659 பணியிடங்கள்
சீல்டா பிரிவு – 1123 பணியிடங்கள்
அசன்சோல் பிரிவு – 412 பணியிடங்கள்.