* விரைவில் Professional Tax கட்டி ரசீது வாங்கிக் கொள்ளுங்கள். ( அனைவருக்கும் ₹1250)
* இரண்டு IT படிவம் உரிய ஆவணங்களோடு தயார்படுத்திக் கொள்ளுங்கள். அநேகமாக பிப்ரவரி 10 இல் சமர்ப்பிக்க வேண்டி வரும்.
* ஒரு நாள் கொரோனா பேரிடர் நிவாரண நிதி அளித்ததை கழித்து கொள்ளலாம். கூடுதலாக தனிப்பட்டு யாரும் அளித்திருந்தால் அதற்குரிய சலான் (அ) ஒப்புகை ரசீதை இணைத்து காட்டி அதனையும் கழித்துக் கொள்ளலாம்.
* இம்முறை வரிதாக்கலில் பழைய முறை, புதிய முறை என்று இரண்டு வகை உள்ளது. தங்களுக்கு பலனளிக்கும் முறை எது என்பதை கணக்கிட்டு அந்த முறையில் சமர்ப்பிக்கலாம். ஆனால் ஒருமுறை புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறி விட்டால் மீண்டும் பழைய முறைக்கு மாற முடியாது. எப்போதும் புதிய முறையிலேயே தொடர வேண்டும்.
* பழைய முறை
இது வழக்கமாக நாம் சமர்ப்பிக்கும் முறை. தேவையான கழிவுகள் (Deductions) கழித்து இறுதியில் வரும் வரிக்கான வருமானத்திற்கு (Taxable Income) வரி செலுத்துவது.
250000 வரை – வரி இல்லை
250000 – 500000 வரை – 5%
500000 – 1000000 வரை – 20%
1000000 க்கு மேல் – 30%
* புதிய முறை
இது கடந்தாண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த முறை. இதில் எந்தக் கழிவும் இல்லை. கழிவுக்கான எந்த ஆவணமும் தேவையில்லை. ஒட்டுமொத்த நிகர வருமானத்தை (Gross Income) கொண்டு வரி விதிக்கப்படும்.
250000 வரை – வரி இல்லை
250000 – 500000 வரை – 5% ( tax rebate is available)
500000 – 750000 வரை – 10%
750000 – 1000000 வரை – 15%
1000000 – 1250000 – 20%
1250000 – 1500000 – 25%
1500000 க்கு மேல் – 30%
* புதிய முறைக்கு மாற எண்ணுபவர்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வீட்டுக்கடன் (Housing Loan) பெற எதுவும் திட்டமிருந்தால் சற்றே சிந்திக்கவும். தோராயமாக அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு இரண்டு முறைகளிலும் கணக்கிட்டு பார்த்து முடிவெடுக்கவும். ஏனெனில் வீட்டுக்கடன் கணிசமாக வரியை குறைக்கும். புதிய முறையில் வீட்டுக்கடன் வரிவிலக்கு பெற முடியாது. புதிய முறைக்கு மாறிய பின் பழைய முறைக்கு மாற முடியாது.
* IFHRMS சம்பள முறையால் Epayroll இல் ஆண்டு சம்பளம் முழுமையாக வரவில்லை. பிப்ரவரி முதல் வாரம் வரை பொறுத்திருந்து பார்த்து படிவத்தை தயாரித்த பின் ஆண்டு வருமானப் பட்டியல் (Annual Statement) தரவிறக்கம் (download) செய்து இணைத்துக் கொள்ளுங்கள்.
* அடுத்தடுத்து அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறி வருவதால் விரைவில் நேரடியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கும் முறையும் கூட வரலாம். எனவே கணினியில் IT படிவத்தை தயாரிக்கப் பழகி இப்போதைக்கு Hardcopy ஆக சமர்ப்பிக்க பழகிக் கொள்ளுங்கள். (எப்போதைக்கும் Softcopy ஆக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்) ஏனெனில் வருங்காலத்தில் இதுவும் கூட தகவல் மேலாண்மையில் பதியப்படலாம். இந்தாண்டு டிஜிட்டலாக மாற முயற்சிப்போம். வாய்ப்பற்றவர்கள் வழக்கம் போல் படிவத்தில் நிரப்பிக் கொடுக்கலாம்.