10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பது சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.
ஆணை :
10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பது சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.
2020-2021 – ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை
முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல்
தயாரிப்பதற்கு , EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின்
தகவல்களுள் , கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
1. மாணவரின் பெயர் ( தமிழ் மற்றும் ஆங்கிலம் )
2. பிறந்த தேதி
3. புகைப்படம்
4. பாலினம்
5. வகைப்பாடு ( சாதி அடிப்படையிலான வகைப்பாடு )
6. மதம்
7. மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் ( தமிழ் மற்றும் ஆங்கிலம் )
8. மாற்றுத் திறனாளி வகை
9. கைபேசி எண்
10. பாடத் தொகுப்பு – Group code ( +1 மாணவர்களுக்கு மட்டும் )
11. பயிற்று மொழி ( Medium of instruction )
12. மாணாக்கரின் வீட்டு முகவரி
பள்ளி
மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே , 2020 2021 – ஆம்
கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்
தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால் ,
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , இன்று ( 27.01.2021 )
முதல் 06.022021 வரையிலான நாட்களில் EMIS -ல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி , EMIS Portal- ல் சென்று தங்களது
பள்ளியில் 1 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து
மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதனையும் ,
மாணவரின் பெயர் , பிறந்ததேதி , புகைப்படம் மற்றும் பாடத்தொகுப்பு ஆகிய
விவரங்கள் பின்வருமாறு உள்ளதா என்பதனையும் சரிபார்த்து , திருத்தங்கள்
இருப்பின் உடன் திருத்தத்தினை மேற்கொள்ளவேண்டும்.