முதன்மை கல்வி அலுவலருக்கு மிரட்டல் ! - Tamil Crowd (Health Care)

முதன்மை கல்வி அலுவலருக்கு மிரட்டல் !

 முதன்மை கல்வி அலுவலருக்கு மிரட்டல் :மனித உரிமை ஆணையத்தில் புகார்

பள்ளி தலைமையாசிரியர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததற்காக, பொதுமக்களை அனுப்பி, பணி செய்ய விடாமல் மிரட்டுவதாக, முதன்மை கல்வி அலுவலர் உஷா, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை, வரதராஜபுரம், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம். இவர் மீதான புகார்களுக்கு விளக்கம் அளிக்க கோரி, கடந்த 6ம் தேதி, முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், கடந்த 11ம் தேதி, முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சி.இ.ஓ., உஷா கூறுகையில், ”அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகளின் படி, சொத்து வாங்குபவர்கள், துறை ரீதியாக முன் அனுமதி பெறுவது கட்டாயம்.

 சம்பந்தப்பட்டவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், துறை ரீதியாக விளக்கம் கேட்பது வழக்கமான நடைமுறை. இதற்கு விளக்கம் அளிக்காமல், பொதுமக்களை அரசு ஊழியருக்கு எதிராக செயல்பட வைத்ததோடு, தகாத வார்த்தைகள் கூறி மிரட்டுவது, மனித உரிமை மீறலாகும். வீடியோ ஆதாரத்துடன், மனித உரிமை ஆணைய கமிஷனருக்கு புகார் அளித்துள்ளேன்,” என்றார்

Leave a Comment