தேர்தல் பணிகளில் இருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
‘முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு
பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி சட்டசபை தேர்தல் பணிகளில் இருந்து மதுரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
கலெக்டர் அன்பழகனிடம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளதால் அவர்கள் நலன் கருதி பாடத்திட்டங்களை முடிக்கும் வகையில் கூடுதல் வகுப்புகளை முதுநிலை ஆசிரியர் மேற்கொள்கின்றனர்.
ஆசிரியர்களின் கோரிக்கை:
- வழக்கமாக சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடி அலுவலர் பணி ஒதுக்கப்படும். பொதுத் தேர்வை முன்னிட்டு இந்தாண்டு தேர்தல் பணியில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
- கோவிட் 19 பரவல் காலமாக உள்ளதால் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் தபால் ஓட்டுகள் முழுமையாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
- தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள், பிரச்னைகளை தெரிவித்து அவற்றை களைய ‘ஹெல்ப் டெஸ்க்’ அமைத்து தர வேண்டும்.
- தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு இருப்பிடத்திற்கு அருகாமையில் ஆசிரியருக்கு தேர்தல் பணி ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . நிர்வாகிகள் பிரேம்குமார், கார்த்திகேயன், சரவணக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.