- Tamil Crowd (Health Care)

 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 

பெரியார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன்பிசி உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம் வேப்பேரி பெரியார் திடலில் மார்ச் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:

 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-1,GROUP-2, GROUP-4மற்றும் UPSC தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆரம்ப பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. மார்ச் மாதம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மேற்கண்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

 இந்த கருத்தரங்கில் போட்டித்தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற மாணவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.

 தேர்வுகளில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை பற்றியும் விளக்க உள்ளனர்.

 மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு பதிலை தெரிந்து கொள்ளுங்கள் இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 044-26618056, 99406 38537 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் இந்த தகவலை பெரியார் ஐஏஎஸ் அகாடமி  இயக்குனர் அமுதன் வெளியிட்டுள்ளார்

Leave a Comment