“வாக்காளர் சீட்டில் புகைப்படம் கிடையாது” – சத்யபிரதா சாஹு!
சட்டமன்றத் தேர்தல்:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வாக்காளர்கள் ஒட்டு போட வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டு போட வரும் வாக்காளர்கள் முககவசம் அணிந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும் .
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம்.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்துகொண்டு வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.