ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஊக்கப்படுத்தும் வகையில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்
சட்டசபை தேர்தல் பணிகள்:
சட்டசபை தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணிகளை கவனிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் .ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றில் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக கடந்த தேர்தலை விட வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். மாவட்ட வாரியாக அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஊக்கப்படுத்தும் வகையில் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தலைவர் பி.கே .இளமாறன் கூறினார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்குச்சாவடியில் அரசியல் பிரமுகர் மூலம் மிரட்டலை சந்திக்கின்றனர். அதனால் கூடுதலாக போலீஸ் படையை ஒதுக்க வேண்டும் என்று தமிழக தமிழாசிரியர் கழக இணைச் செயலாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார். அதேபோல, பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை. கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருப்பதும் இல்லை. அதனால் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கழிப்பிடங்களை சுத்தமாக வைக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்று அவர்கள் கூறுகின்றனர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் நல சங்க செயலாளர் கேசவன் கூறுகையில் கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். அனைத்து வாக்காளர்களையும் கருவி மூலம் உடல் வெப்பத்தைக் கணக்கிட வேண்டும் என்றார்