ஆசிரியர்கள், பிற பணியாளர்களுக்கு முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து அறிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள காரணத்தினால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களுக்கு முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக covid-19 தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் 10. 3. 2011 தடுப்பூசி செலுத்திட வேண்டுமென முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அதன்படி பள்ளிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் அனைவரும் covid-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான அறிக்கையினை தினசரி அறிக்கையாக அவர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- வரிசை எண்,
- அலுவலகம் அல்லது பள்ளியின் பெயர்,
- மொத்த ஆசிரியர்கள் ,அல்லது பணியாளர்களின் எண்ணிக்கை,
- covid-19 தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை .
குறிப்பு:
இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் தர்மபுரி மாவட்டம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நகல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் இதனை பெற்றுக் கொள்ளவேண்டும்.
இதனுடைய நகல் மாவட்ட கல்வி அலுவலர்கள் தர்மபுரி, அரூர் மற்றும் பாலக்கோடு படிகளில் இருந்து பெறப்படும் தினசரி அறிக்கையினை பெற்று தொகுத்து வழங்கும் பொருட்டு. இதன் ந.க. எண்: 5244/அ1/2020 நாள்:4/3/2021.