கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை-வாக்காளர்கள் கையுறை அணிந்து ஓட்டளிக்க ஏற்பாடு
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும்கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாக்காளர்கள் கையுறைஅணிந்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படிசட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்கு சாவடிகளிலும்கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏப்., 6 ஓட்டுப்பதிவு முந்தைய நாள் அனைத்துவாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி மருந்துதெளிக்கப்படும்.
வாக்காளர்களின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டுகைகளை சுத்தம் செய்து கொள்ள சானிடைசர் வழங்கப்படும்.
இங்குஅனைத்து பணியாளர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிவார்கள். வாக்காளர்கள் அனைவருக்கும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பாலிதீன் கையுறை வழங்கப்படும்.இதனை அணிந்து கைவிரல் மூலமாக இயந்திரத்தில் பட்டனை அழுத்தி ஓட்டளிக்க வேண்டும்.வாக்காளர்கள் அனைவரும்முகக்கவசம் அணிந்து கொரோனா பரவலைதடுக்க ஒத்துழைக்க வேண்டும்,’எனக்கூறியுள்ளார்