தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்
“பிடிச்ச சின்னத்துக்கு போடு ஓட்டு
பிடிக்கலைன்னா இருக்கு நோட்டா”
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதற்காக பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. இந்நிலையில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் 21 வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்,
நமது ஓட்டு தான் நாட்டின் தலையெழுத்தை மாற்றும்.
அலட்சியம் வேண்டாம்.