திருக்குறள் தேசியக் கருத்தரங்கு
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தவுள்ள திருக்குறள் தேசிய கருத்தரங்கிற்கான கட்டுரைகளை வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘தலைவா் சொ.க.கோவிந்தசாமி-கோ.சின்னம்மாள் திருக்குறள் அறக்கட்டளை’யின் மூலமாக ‘பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத்தன்மை’ என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
கருத்தரங்கிற்கான கட்டுரைகள் பின்வரும் விதிமுறைகளுக்கு உள்பட்டு வரவேற்கப்படுகின்றன:
திருவள்ளுவரின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களை மையமாகக் கொண்டு கட்டுரைகள் அமைதல் வேண்டும். ஒருங்குறி (யூனிகோடு) எழுத்துருவில் ஏ4 அளவில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்தல் வேண்டும். கட்டுரைகள் மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சிறந்த கட்டுரைகள் அடங்கிய நூல் உடன் நிறுவன வெளியீடாக வெளியிடப்படும். கட்டுரை அளிப்பதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ள கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542998, 9500012272 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.