பாரத ரத்னா விருது
பாரத ரத்னா விருது பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம்.
- தங்களின் உயரிய சேவையினால் தங்கள் நாட்டின் பெருமையை உயர்த்திய இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருது பாரத ரத்னா விருது.
- இவ்விருது இந்திய குடிமகனுக்கு மட்டுமல்லாமல் உயரிய சேவையினால் தங்கள் நாட்டின் பெருமையை உயர்த்திய அயல்நாட்டு குடிமகனுக்கும் இது வழங்கப்படும் .
- பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- பாரத ரத்னா விருது முதல் முதலாக இந்திய இயற்பியல் விஞ்ஞானி சர். சி .வி. ராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- பாரத ரத்னா விருது- இந்த விருது தங்கத்திலான 35 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட வட்டவடிவிலான பதக்கம்.
- இப்பதக்கத்தின் முன்பக்கம் மேலே சூரியனும் இடையில் பாரதரத்னா என்ற எழுத்தும் கீழ்ப்பக்கம் தாமரை மலரும் கொண்டது.
- பதக்கத்தின் பின்புறம் இந்திய அரசின் முத்திரையும் “சத்தியமேவ ஜெயதே” என்ற வாசகமும் குறிக்கப்பட்டிருக்கும்.
- வெள்ளை நிற நாடாவில் சேர்க்கப்பட்டுள்ள பதக்கம் குடியரசுத் தலைவரால் விருது பெறுபவர் கழுத்தில் அணிவிக்கப்படும்
பாரத ரத்னா விருதை பெற்ற அயல்நாட்டினர் சிலர்:
- அன்னை தெரசா,
- கான் அப்துல் கபார் கான்,
- நெல்சன் மண்டேலா போன்றவர்கள்.
பாரத ரத்னா விருது பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற வரையறை எதுவும் வகுக்கப்படவில்லை.