மகளிருக்கான மருத்துவ குறிப்புகள்
கரும்புள்ளிகள், தழும்புகள்:
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அவற்றை போக்க பல முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சாதாரண முள்ளங்கியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு மோர் கலந்து அந்த கலவையை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல குணம் தெரிவதுடன் விரைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
உடல் பருமன் குறைய:
திருமணத்திற்கு முன் ஸ்லிம்மாக இருந்த சில பெண்கள் திருமணத்திற்கு பின் குண்டாகிவிடுவது உண்டு. அதிக மகிழ்ச்சி, அதிகமாக உண்பதாலும் தான் இந்த உடல் வீக்கம் என்று பலர் நினைப்பார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் கர்ப்பப்பை கோளாறு என்றாலும் உடல் பருக்க ஆரம்பிக்கலாம் .எனவே, பெண்கள் தங்கள் உடலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது .
சேற்றுப்புண் வராமல் இருக்க:
பெண்கள் நீரில் அதிக நேரம் இருப்பதால் அவர்களுக்கு சேற்றுப்புண் அதிகமாய் வருகிறது. இவர்கள் வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் அரைத்து சேற்றுப்புண் பித்தவெடிப்பிற்கு போட்டால் குணமாகும்.
தலை முடி உதிர்வதை தவிர்க்க:
தலையை வாரி பின்னிக் கொள்ளும் போது 7,8 தடவைகளாவது சீப்பை கொண்டு அழுத்தி வாரிக் கொள்ளுங்கள். இதனால் மயிர்கால்களுக்கு அதிக ரத்த ஓட்டம் நன்றாக ஓடும். தலைமுடி உதிராமல் காக்கும்.