சித்த மருத்துவ குறிப்புகள்-வாழையின் பயன்கள்,வெள்ளரியின் பயன்கள்
வாழையின் பயன்கள்:
- வாழைத் தண்டு சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும் .
- தினமும் இரவில் படுப்பதற்கு முன் செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் தொற்றுநோய்கள் பரவாது.
- வாழைத்தண்டு சாறு எடுத்து மண் சட்டியில் ஊற்றி சுடவைத்து குடித்தால் நீர்க்கடுப்பு குணமாகும் .
- இஞ்சி பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீரும்.
- பிஞ்சு வாழைக்காயை அடிக்கடி சமையல் செய்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும் .
- வாழைத்தண்டு பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
- வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகு பெறும்.
- வாழைத் தண்டு சாறு எடுத்து நாலு அல்லது ஐந்து டம்ளர் குடித்தால் கல் அடைப்பு நீங்கும்.
- முற்றிய வாழை மரத்தின் அடியில் இருந்து 100 மில்லி சாறு எடுத்து அதில் 100 மில்லி தும்பைச் சாறு கலந்து குடித்தால் அனைத்துவிதமான விஷமும் முறிந்து விடும்.
- வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தக் கடுப்பு நீங்கும், வெள்ளைப்படுதல் பிரச்சினையும் தீரும்.
- வாழைத்தண்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
வெள்ளரியின் பயன்கள்:
- சீரகம் சேர்த்து வறுத்து பொடி செய்து தினமும் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் தொண்டை நோய்கள் விலகும்.
- வெள்ளரி,வெங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
- வெள்ளரி, முள்ளங்கி, வாழைத்தண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாறு எடுத்து குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
- நீரடைப்பு ,நீர்க்கட்டு போன்றவையும் விலகும்.
- வெள்ளரி பழத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும் இளைத்த உடல் பெருக்கும்.
- வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும்.
- வெள்ளரி விதையை தண்ணீரில் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் அடைப்பு சதை அடைப்பு, சிறுநீர் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும் .
- வெள்ளரி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாய்ப்புண் தொண்டைப்புண் ஆறும்.