வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு ஒருவாரத்தில் தேர்தல் பணி ஆணை வழங்கப்படும்- தேர்தல் ஆணையம் உத்தரவு. - Tamil Crowd (Health Care)

வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு ஒருவாரத்தில் தேர்தல் பணி ஆணை வழங்கப்படும்- தேர்தல் ஆணையம் உத்தரவு.

 வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு ஒருவாரத்தில் தேர்தல் பணி ஆணை வழங்கப்படும்- தேர்தல் ஆணையம் உத்தரவு.

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்: 
 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 12-ஆம் தேதி துவங்குகிறது. தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலானோர் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவர்.
 இவர்களுக்கு பயிற்சி அளித்து வாக்கு பதிவிற்காக தயார்படுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 

மூன்று கட்ட பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது:

 தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் மூன்று கட்ட பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது 
.
இந்த பயிற்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:
 தேர்தலை பொறுத்தவரை வாக்குப்பதிவுக்கு 20% ஆசிரியர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டு அவசர தேவைக்கு பயன்படுத்தி பட்டியலில் வைக்கப்படுவது வழக்கம் .
அதன் அடிப்படையில் 120 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
 covid-19 தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடைபிடித்தல் தொடர்பாக பயிற்சி தர வேண்டும்.
 இந்த தகவல்கள் அனைத்தும் தமிழில் தெளிவாக இணைக்கப்பட வேண்டும்.
 முதல்கட்ட பயிற்சி: 
  • வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர், நிலை 1,2,3,4 ஆகியோருக்கு தனித்தனியாக அளிக்கவேண்டும்.
  •  40 பேருக்கு ஒரு அரை வீதம் பயிற்சி அளிக்க வேண்டும்.
  •  தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல அலுவலர்கள் முன்னிலையில் பயிற்சி அளிக்கவேண்டும்.
  •  முதல்கட்ட பயிற்சியின்போது மாதிரி வாக்குச் சாவடிகள் அமைத்து பயிற்சி அளிப்பதுடன் படிவங்கள் பூர்த்தி செய்தல் குறித்து பயிற்சி தர வேண்டும்.
  •  தபால் ஓட்டு படிவம்  பயிற்சியின்போது வழங்க வேண்டும் .
இரண்டாம் கட்ட பயிற்சி
  • அந்தந்த மண்டல அலுவலர்கள் தொகுதிகளில் நடத்தவேண்டும்.
  •  வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைத்திற்கும் ஒரு சேர பயிற்சி அளிக்க வேண்டும். 
  • தபால் வாக்கு சீட்டுகள் வழங்குவதுடன் வாக்களித்ததால் வாக்குச்சீட்டுகளை பெறுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
  •  வாக்குப்பதிவு, கண்காணிப்பு மொபைல் செயலி மூலம் வாக்குப்பதிவு நிலவரம்  சோதித்துப்பார்க்க வேண்டும்.
  •  இரண்டாம் கட்டமாக மீண்டும் பயிற்சி அளிக்கும்போது வாக்குப்பதிவு அலுவலர்கள் யார் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். 
மூன்றாம் கட்ட பயிற்சி:
  •  கடைசி கட்ட சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும் .
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பணி ஆணைகளை தேர்தல் பணியாளர்கள் கணினி மூலம் குலுக்கல் நடத்தி தேர்வு செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முதல் 15ஆம் தேதிக்கு முன்னதாக நடத்த உத்தரவிட்டு உள்ளதால் அடுத்த வாரம் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Comment