ஜனாதிபதி -சென்னை வருகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூன்று நாட்கள் பயணமாக, 9ம் தேதி, சென்னை வருகிறார். வேலுார் மற்றும் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
9ம் தேதி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வரும், 9ம் தேதி மாலை, டில்லியில் இருந்து, தனி விமானத்தில், சென்னை வருகிறார். அன்று இரவு, கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.
10ம் தேதி:
மறுநாள் புதன் கிழமை, 10ம் தேதி காலை, சென்னையில் இருந்து, ஹெலிகாப்டரில், வேலுார் அருகே உள்ள, பொற்கோவிலுக்கு செல்கிறார். பின், தனியார் பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை, சென்னை திரும்புகிறார். இரவு, கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.
11ம் தேதி:
வரும், 11ம் தேதி காலை, சென்னை அண்ணா பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிற்பகல், தனி விமானத்தில், டில்லி செல்கிறார்.