அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு
தமிழகத்திற்கு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் விமான பயணியரை தீவிரமாக கண்காணிக்கும்படி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா கண்காணிப்பு மையத்தை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்
அப்போது, அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியர் அனைவரையும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களது
- மொபைல் போன் எண்,
- முகவரி
என, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, பெற வேண்டும்.
கொரோனா அறி குறிகள் இருந்தால், ஆர்.டி.பி.சி.ஆர்.,(RTPCR) பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை, தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். தொற்றில்லை என, உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால், ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.