பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்- இரத்த தானம். - Tamil Crowd (Health Care)

பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்- இரத்த தானம்.

  பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்- இரத்த தானம்.

” தானத்தில் சிறந்தது அன்னதானம்”

 எனும் காலம் மாறிப்போய்

தானத்தில் சிறந்தது ரத்த தானம்” என்னும் காலம் இது .

குறிப்பு :

  • முன்னுரை  
  •  இரத்தத்தில் உள்ள பிரிவுகள்
  • எவரெல்லாம் நகை தானம் கொடுக்கலாம்
  •  இரத்த தானம் கொடுக்கும் முறை
  •  யாரெல்லாம் ரத்த தானம் செய்வது தவறு
  •  இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு
  •  முடிவுரை

 முன்னுரை:

 இன்றைய காலகட்டத்தில்  இரத்த தானத்தையும் மீறி சிறுநீரக தானம் அளிக்கவும், அதற்கும் ஒரு படி மேலே போய் இன்று பலர் தங்களின் உடலை தாங்கள் இறந்த பிறகு தானமாய் கொடுக்கும் மனித புனிதர்களும் இருக்கிறார்கள்.

 அவ்வாறு தானமாக கொடுக்கப்படும் உடலை கொண்டு பல மருத்துவ மாணவர்கள் உடற்கூறு இயல்- ஐ கற்றுக்கொள்கிறார்கள்.  இரத்த தானத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

இரத்தத்தில் உள்ள பிரிவுகள்:

 இரத்தத்தில் நான்கு பிரிவு இரத்தம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்தவர்கள் அந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே  இரத்தத்தை தானமாக அளிக்க முடியும். சாதாரணமாக நான்கு வகைப் பிரிவுகள் “ஏ”,” பி”, “ஏபி”, “ஓ”,-“A”,”B”,”AB”,”O” ஆகும்.  இரத்தத்தை மாற்றி அளித்துவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

 எவரெல்லாம் ரத்த தானம் கொடுக்கலாம்:

 ஆண் பெண் இருபாலரும் 18 வயதிலிருந்து 60 வயது வரை இரத்தத்தை தானமாக அளிக்கலாம். 

அவ்வாறு அளிப்பவர்களின் குறைந்தபட்ச எடை 45 கிலோ வாகவும் உடலில் ரத்தத்தை குறிக்கக்கூடிய அளவான ஹீமோகுளோபினின் அளவு குறைந்த பட்சம் 12.5 கிராம் % இருத்தல் வேண்டும்.

 இரத்த தானம் அளிப்பவர்களின் ரத்த அழுத்தம் குறைந்த அளவு 110 / 90 மி. மீ பாதரசம் ஆகும். அதிகபட்சம் 160 / 90 மி. மீ பாதரசம் ஆகவும் இருக்கலாம்.

 இரத்த தானம் கொடுக்கும் முறை :

 இரத்த தானம் மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் செய்தல் வேண்டும் .

 இரத்ததானம் அளிப்பதற்கான தடைகள் :

  1. தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தால் மூன்று நாட்களில் இருந்து ஒரு வருடம் வரை போட்டுக்கொள்ளும் தடுப்பூசியினை பொறுத்து  இரத்ததானம் அளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
  2.  மலேரியா காய்ச்சல் வந்ததிலிருந்து ஆறுமாதங்களுக்கு  இரத்தத்தை தானமாக அளிக்க கூடாது.
  3.  பெண்கள் மாதவிடாய் சமயத்தில்  இரத்த தானம் அளிக்க கூடாது.
  4.  மது அருந்துபவர்கள் மது அருந்தியதில் இருந்து 12 மணி நேரம் கழித்து  இரத்த தானம் அளிக்க வேண்டும்.
  5.  சிறு அறுவை சிகிச்சை செய்து இருந்தால் மூன்று மாதங்களுக்கு  இரத்ததானம் அளிக்கக்கூடாது.
  6.  பெரிய அறுவை சிகிச்சை செய்து இருந்தால் 6 முதல் 12 மாதங்கள் வரையும்  இரத்த தானம் அளிக்க கூடாது.
  7.  டைபாய்டு காய்ச்சல் வந்தால் அதற்குப் பின் 12 மாதங்களுக்கு  இரத்ததானம் அளிக்கக்கூடாது .
  8. ஆஸ்பிரின் போன்ற மருந்தினை சாப்பிடுபவர்கள் மருந்தை நிறுத்தி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் இரத்த தானம் கொடுக்க வேண்டும்.
  9.  காசநோய் சிகிச்சை  பெற்றவர்கள் சிகிச்சை பெற்றதிலிருந்து இரண்டு வருடங்கள் வரையும்  இரத்ததானம் அளிக்கக்கூடாது.
  10. ” ஏ “வகை காமாலை நோய் வந்தவர்கள் ஆண் நோயிலிருந்து குணம் ஆகி ஒரு வருடம் வரைக்கும்  இரத்ததானம் செய்யக்கூடாது.
  11.  பிரசவம் ஆன பின்பு ஒரு வருடம் வரையும் இரத்தம் கொடுக்க கூடாது.
  12.  தாய்ப் பாலூட்டும் தாய்மார்களும் அதற்குப்பின் ஆறு மாதத்திற்கும்  இரத்தத்தை கொடுப்பது நல்லதல்ல .

யாரெல்லாம்  இரத்த தானம் செய்வது தவறு:

  • ” பி மற்றும் சி” வகை காமாலை நோய் ஏற்பட்டவர்கள்
  •  எய்ட்ஸ் நோய் உடையவர்கள்
  •  மேக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
  •  இருதயம் மற்றும் நுரையீரல் நோயுடையவர்கள்
  •  புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
  •  மருந்துகளுக்கு அடிமையானவர்கள்
  •  மிகை ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள்
  •  சர்க்கரை நோய் இருப்பவர்கள் 
  • வளர்ச்சி ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்பவர்கள்
  •  நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையில் இருப்பவர்கள்
  •  இவர்கள் அனைவரும் இரத்த தானம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

 இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு எவ்வளவு?

 இரத்த தானம் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் 350 மில்லி லிட்டர் இரத்தத்தை மட்டுமே எடுப்பார்கள்.

 முடிவுரை:

 இரத்த தானம் அளிப்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவார்கள் என்றும் பின் விளைவுகள் ஏற்படும் என்றும் கூறுவது முற்றிலும் பொய்.

 இரத்த தானம் அளித்த உடன் சிறிது சோர்வு இருப்பது போன்ற உணர்வு இருக்குமே தவிர வேற எந்த பிரச்சினையும் ஏற்படாது.

 அதுவும் நல்ல உணவு சாப்பிட்டால் உடனே சோர்வும் நீங்கிவிடும்.

 அடிக்கடி  இரத்த தானம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

  இரத்த தானம் செய்பவர்கள் தாராளமாக தங்களின் பணிகளை செய்யலாம் .கடின உழைப்பிற்கும் தங்களை தயார் படுத்திக்கொள்ளலாம்.

 

Leave a Comment