சித்த மருத்துவ குறிப்புகள் கொத்தமல்லியின் பயன்கள் கொய்யாவின் பயன்கள்
சித்தமருத்துவம் மனிதனுக்கு பல அரிய பல செய்திகளையும் நன்மைகளையும் விட்டுச் சென்றுள்ளது. இன்று கொத்தமல்லியின் பயன்களையும், கொய்யாவின் பயன்களையும் பற்றி காண்போம்.
கொத்தமல்லியின் பயன்கள்:
- கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு ,வெங்காயச் சாறு- மூன்றையும் சம அளவு எடுத்து தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு, இதில் தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
- கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கொத்தமல்லி சாற்றில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் கொழுப்பு குறையும்.இரத்த அழுத்தம் சீராகும்.
- கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக மென்று தின்றால் உடல் சூடு குறையும், நன்றாக பசி எடுக்கும் .
- கொத்தமல்லி மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் குளிர் காய்ச்சல் குணமாகும்.
- கொத்தமல்லி சீரகம் மற்றும் மஞ்சள் சேர்த்து கசாயமாக வைத்து குடித்தால் பித்த நோய்கள் தீரும்.
- கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும் கொத்தமல்லி உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கசாயம் வைத்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும் .
- கொத்தமல்லியை நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி வீக்கம் மற்றும் கட்டிகள் மீது கட்டினால் புண் எளிதில் ஆறிவிடும்.
- கொத்தமல்லி மற்றும் துளசியை கசாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும் .
- கொத்தமல்லியை பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.
- கொத்தமல்லி சாறு புதினாச் சாறு துருவிய வெள்ளரிக்காய் மூன்று முகத்தில் பூசிவந்தால் கருப்பு நிறம் மாறி முகம் பொலிவு பெறும்.
- கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.
- கொத்தமல்லி சீரகம் 2 ஸ்பூன் இரண்டையும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்தால் தலைவலி குணமாகும்.
- கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
- கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து இரவு படுப்பதற்கு முன் உதடுகளில் தடவிக் கொண்டால் உதடுகள் சிவப்பாக மாறும்.
- கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றில் பற்றுப்போட்டால் தலைபாரம் தலைவலி குணமாகும்.
- ஒத்த மல்லி சாறு எடுத்து உடலில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் தோல் வெளுப்பாக மாறும்.
- கொத்தமல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் படை, சிரங்கு போன்ற தோல் நோய்களை தடுத்துவிடலாம்.
- கொத்தமல்லியை காயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எடை குறைவாக ஏற்படும் தோல் நோய்களை குணப்படுத்தலாம்.
கொய்யாவின் பயன்கள்:
- கொய்யா போய் கசாயம் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
- கொய்யா இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரால் வயிற்றை கழுவி வந்தால் பெருவயிறு குறையும்.
- கொய்யா இலையை கசாயம் வைத்து புண்களை கழுவி வந்தால் அவை விரைவில் ஆறும்.
- கொய்யாப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
- கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.
- பழுத்த கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
- கொய்யா பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறும்.
- கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.
- கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.
- கொய்யா வேரை (அரை கிராம்) எடுத்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் நாக்கு பூச்சிகள் அழியும்.