மகளிருக்கான மருத்துவ குறிப்புகள் - Tamil Crowd (Health Care)

மகளிருக்கான மருத்துவ குறிப்புகள்

  மகளிருக்கான மருத்துவ குறிப்புகள்

 பெண்களின் முகப்பரு:

 பெண்களுக்கு அவர்களின் முகங்களில் தோன்றும் பருக்கள் முகங்களில் அழகை கெடுக்கும். 20 வயது முதல் 30 வயது உள்ள பெண்களுக்கு அவர்கள் உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்களினால் கூட முகப்பரு ஏற்படக்கூடும். இவை மட்டுமின்றி வலிப்பு நோய்க்கு சாப்பிடும் மருந்துகள், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு சாப்பிடும் மாத்திரைகளும்  முகப்பருவை அதிகரிக்கும். எனவே, முகப்பரு ஏற்படாதவாறு ரசாயன பொருட்களின் பயன்பாட்டினை குறைத்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 இரத்தசோகை:

 இரத்தசோகை நோய் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாய் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான இரத்தம் இல்லாததால் இந்த நோய் ஏற்படுகிறது. அதிக உழைப்பும் சரியான சத்தான உணவு உண்ணாததாலும் நோய் ஏற்படுகிறது. எனவே, இவர்கள் இரும்பு சத்து கலந்த உணவுகளையும் பழங்களையும் காய்கறிகளையும் நிறைய சாப்பிட வேண்டும்.

 வெள்ளைப்படுதல் :

இது பெண்களுக்கு பிரச்சினையையும் அவர்களுக்கு அருவருப்பையும் தரும் ஒரு நோய். இந்நோய்க்கு உணவில் காரம் புளிப்பு குறைத்து சாப்பிட மட்டுப்படும். இரத்தம் அதிக அளவில் குறைந்தாலும் இந்நோய் ஏற்படும். எனவே சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, வாழைப்பழம், மாதுளம் பழம், அத்திப்பழம், திராட்சை பழம், சப்போட்டா பழம் ஆகியவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

 பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவதற்கான காரணங்கள்:

 பெண்களுக்கு மார்பு புற்று நோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  1.  பரம்பரை பரம்பரையாக வருவது.
  2.  மது அருந்துதல்.
  3.  உடற்பயிற்சியின்மை .
  4. 11 வயது ஆவதற்கு முன்பே மாதவிலக்கு ஏற்படுதல்.
  5.  மலட்டுத்தன்மை.
  6.  அளவுக்கு மீறிய துரித உணவுகள்.
  7.  முதிர்ந்த வயதில் குழந்தை பெறுவது

 போன்றன

Leave a Comment