கொரனோ தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு
கோவிஷீல்டு தடுப்பூசி,கோவேக்சின் தடுப்பூசி:
தடுப்பூசி பயனாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க தடுப்பூசி மையத்திலேயே பயனாளிகளை 30 நிமிட நேரம் அமர வைக்கப்படுகின்றனர். மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பக்கவிளைவுகள் ஏற்படுகிறவர்களுக்கு பொது சுகாதார மையத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியால் 8 ஆயிரத்து 402 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசியால் 81 பேருக்கும் லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
கொரனோ தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு காப்பீடு கிடையாது – மத்திய மந்திரி தகவல்:
பக்கவிளைவுகளுக்காக தடுப்பூசி பயனாளிகளுக்கு காப்பீடு வழங்க விதிமுறையில் இடம் இல்லை. கொரோனா தடுப்பூசி என்பது விருப்பத்தின்பேரில்தான் போடப்படுகிறது. அது கட்டாயம் அல்ல.