தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை: டிஜிபி திரிபாதி தெரிவிப்பு.
தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தேர்தல்:
தமிழக சட்டபேரவைக்கு ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன. அதன்பொருட்டு காவல்துறையினர் தொடர் வாகன சோதனை உள்ளிட்ட கூடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதற்றமான பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘சட்டப்பேரவை தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை; அவசரத் தேவை என்றால் மட்டும் விண்ணப்பித்து விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.