கல்வி நிறுவனங்களுக்கு மேலாண் படிப்பு தொடங்க நெறிமுறை: ஏஐசிடிஇ(AICDE) வெளியிட்டது. - Tamil Crowd (Health Care)

கல்வி நிறுவனங்களுக்கு மேலாண் படிப்பு தொடங்க நெறிமுறை: ஏஐசிடிஇ(AICDE) வெளியிட்டது.

 கல்வி நிறுவனங்களுக்கு மேலாண் படிப்பு தொடங்க நெறிமுறை: ஏஐசிடிஇ(AICDE) வெளியிட்டது.

 கல்வி நிறுவனங்களில் மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளை தொலைதூரம், திறந்தநிலை மற்றும் இணையவழியில் தொடங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்  (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.

ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:

மேலாண்மை, கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொறியியலில் உள்ள தகவல் அறிவியல், தொழில்நுட்ப களம்,தளவாடங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய பிரிவுகளில் உள்ள படிப்புகளை தொலைதூரம், திறந்தவெளி மற்றும் இணைய வழி முறையில் வழங்க ஏஐசிடிஇ ஒப்புதல் வழங்கிஉள்ளது.

தகுதிகள் நிர்ணயம்:

அதன்படி, மேற்கண்ட படிப்புகளை வழங்க கல்வி நிறுவனங்களுக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,

  •  நாக்(NAAC) அங்கீகாரம் -3.26 (4),
  • எம்.பி.ஏ-வில் 1,000-க்கு 700 மதிப்பெண்கள்,
  •  தேசிய தரவரிசைபட்டியலில் (என்ஐஆர்எஃப்)(NIRF) முதல் 100 இடம்.

 ஆகிய 3-ல் ஏதேனும் 2 தகுதிகளை பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைதூரம், திறந்தவெளி, இணையவழியில் படிப்புகளை தொடங்க அனுமதி வழங் கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்:

விருப்பமும் தகுதியும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, படிப்புகளின் கால அளவுக்கு ஏற்றவாறுஆண்டுக்கு 3 முறை மாணவர்சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Comment