சித்த மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காய் மற்றும் முட்டைகோஸ் பயன்கள். - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காய் மற்றும் முட்டைகோஸ் பயன்கள்.

  சித்த மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காய் மற்றும் முட்டைகோஸ் பயன்கள் 

நெல்லிக்காயின் பயன்கள்:

  •  நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் குணமாகும்.
  • நெல்லிக்காயை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும், மறுநாள் காலை அந்த தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து தலையில் தேய்த்து குளித்தால் செம்பட்டை முடி கருப்பாக மாறும்.
  •  நெல்லிக்காயை தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
  •  நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
  •  நெல்லிக்காயை பறித்து நன்றாக மென்று தின்றால் பற்கள் உறுதியாகும்.
  •  நெல்லிக்காய் சாறு பிழிந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கணைச்சூடு குணமாகும்.
  •  நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
  •  நெல்லிக்காய் சாற்றில் மிளகு தூள், தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
  •  நெல்லிக்காய் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
  •  நெல்லிக்காயை பச்சை பயிறு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் நீங்கும் .
  • நெல்லிக்காய் , ஆடாதொடை, இலுப்பை பூ மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து நிழலில் காய வைத்து சாப்பிட்டால் ரத்த வாந்தி குணமாகும்.
  •  நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்தால் கண்ணில் நீர் கசிவது நிற்கும்.
  •  நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் கர்ப்பிணிகளுக்கு கை கால் விங்காமல் தடுக்கலாம்.
  •  நெல்லிக்காய் வற்றல் 50 கிராம் ,சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  •  நெல்லிக்காய் பொடி ஒரு ஸ்பூன், கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன், தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இளமை காக்கலாம்.
  •  நெல்லிக்காய், கருவேப்பிலை இரண்டையும் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது.
  •  நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
  •  நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி மூக்கடைப்பு குணமாகும்.

 முட்டைகோஸ் பயன்கள்:

  1.  முட்டைகோஸ், வெங்காயத்தை சேர்த்து வதக்கி 48 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
  2.  முட்டைகோஸை நறுக்கி தண்ணீரில் இரண்டு டம்ளரில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.
  3.  முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நொறுக்கி அதனுடன் உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.
  4.  முட்டைக் கோஸை பச்சையாக அரைத்து சாறு எடுத்து 60 மி.லி அளவு குடித்தால் தொண்டை புண் குணமாகும்.
  5.  முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி தயிர் ,வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
  6.  முட்டைக்கோஸ் ,மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.

Leave a Comment