சித்த மருத்துவ குறிப்புகள்: இஞ்சியின் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: இஞ்சியின் பயன்கள்:

 சித்த மருத்துவ குறிப்புகள்: இஞ்சியின் பயன்கள்:

  •  இஞ்சி சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.
  •  இஞ்சி சாற்றில், சம அளவு எலுமிச்சை சாறு கலந்து, சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
  •  இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து குடித்தால் சளி, இருமல், நெஞ்சு சளி போன்றவை குணமாகும்.
  •  இஞ்சி சாறு, துளசிச் சாறு என்று இரண்டையும் தலா 10 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால் வாந்தி உடனே நிற்கும்.
  • இஞ்சி சாற்றில், சீரகத்தை ஊற வைத்து காய வைத்து எடுத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும்.
  • இஞ்சி சாற்றில், நாவல்கொட்டை பருப்பை ஊற வைத்து காய வைத்து பொடி செய்து கொள்ளவும். இதில் காலை, இரவு உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து காலை, மாலை இரு வேளையும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் காசநோய், வறட்டு இருமல் ஆகியவை குணமாகும்.
  • இஞ்சி சாற்றில், நிலாவரை இலையைச் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் ஒரே நாளில் மலச்சிக்கல் குணமாகும்.
  • இஞ்சி சாற்றில், கடுக்காய் பொடியை கலந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.
  • இஞ்சி சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குணமாகும்.
  • இஞ்சி உப்பு, சீரகம் மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து சாப்பிட்டு சுடு நீர் குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்.
  • இஞ்சி, மாங்காய் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இழுப்பு, காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
  • இஞ்சி தோல் நீக்கி, தேன் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
  • இஞ்சி காயவைத்து பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். 
  • இஞ்சி போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் குளித்தால் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் உடைந்து குணம் கிடைக்கும்.
  • இஞ்சி சாற்றில், தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
  •  இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
  •  இஞ்சி சாறு,துளசிச் சாறு இரண்டையும் கலந்து குடித்துவந்தால் வயிற்று வலி குணமாகும்.
  • இஞ்சி, தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
  •  இஞ்சி சாற்றில், வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
  •  புதினாவுடன், இஞ்சி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும்.
  •  இஞ்சி 5 கிராம் ,புதினா 10 கிராம் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் மார்பு வலி குணமாகும்.
  • இஞ்சி,தேன், லவங்கப் பட்டை, துளசி இவற்றை கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
  • இஞ்சி சாறை, பாலில் கலந்து குடித்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் தீரும், உடம்பு இளைக்கும்.
  •  இஞ்சி சாறு, தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
  •  இஞ்சியை துவையல் மற்றும் பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
  • இஞ்சி உடன் தனியா சேர்த்து அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை பழ சாறு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்த ஏப்பம் மறையும். பசியும் எடுக்கும்.
  •  இஞ்சி சாற்றில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
  •  இஞ்சி ஒரு துண்டு, கோரைக்கிழங்கு ஒரு துண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
  •  இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து குடித்தால் வாத கோளாறுகள் தீரும்.
  •  இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிறு எரிச்சல் குணமாகும்.
  •  இஞ்சி சாற்றில் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொந்தி கரையும்.
  •  இஞ்சி சாறு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் கலந்து குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
  •  இஞ்சி சாறு, துளசிச் சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்தால் வாயு தொல்லை தீரும்.
  •  இஞ்சியுடன், எலுமிச்சை பழம் சாறு, சீரகம் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் தணியும். 

Leave a Comment