சித்த மருத்துவ குறிப்புகள்: கேழ்வரகின் நன்மைகள்,பாகற்காயின் நன்மைகள்.
கேழ்வரகின் நன்மைகள்
- கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும்.
- கேழ்வரகை களி செய்து கட்டி மீது வைத்து கட்டினால் விரைவில் கட்டிகள் பழுத்து விடும்.
- கேழ்வரகை தினமும் கஞ்சி செய்து குடித்து வந்தால் ரத்தம் சுத்தி அடையும்.
- கேழ்வரகு களி உடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்பு போல் உடல் வலுப்படும்.
பாகற்காயின் அவசியம்:
- பாகற்காயின் விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
- பாகற் காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வராது.
- பாகற்காயை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
- பாகற்காயின் இலைச் சாற்றை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து குடித்தால் காலரா குணமாகும்.
- பாகற்காய் சாறு எடுத்து அதில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பெருவயிறு குறையும்.
- பாகற்காய் சாற்றில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள், சர்க்கரை நோய், உடல் பலவீனம் போன்றவை விலகும்.
- இலையை அரைத்து சாறு எடுத்து ஆசனவாயில் தடவி வந்தால் அவை விரைவில் ஆறும்.