தகவல் துளி விமானம் :பறப்பது எப்படி தெரியுமா?
ஒரு பொருளை உயரே வீசினால் அது கீழே விழும் காரணம் அந்த பொருளை கீழ் நோக்கி இழுக்கிறது புவியீர்ப்பு விசை. புவி ஈர்ப்பு விசையின் சக்தியை விட அதிகமான சக்தி அந்த பொருளுக்கு இருந்தால் அதன் மேலேயே மிதந்து கொண்டிருக்கும். புவியீர்ப்பு விசையின் சக்தியை விட அதிகமான சக்தியை கொண்டுள்ளது தான் விமானம் கீழே விழாமல் பறக்கிறது.
இந்த அதிக சக்தி விமானத்தில் எப்படி கிடைக்கிறது தெரியுமா? விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் சக்தி அதை மிக வேகமாக முன்னோக்கி ஊடுருவி பாய்கிறது. இது” ஊடுருவி செலுத்தும் விசை” எனப்படும் .
விமானத்தின் இறக்கைகள் மின்விசிறியின் பிளேடுகள் போல சிறிது வளைவாக இருக்கும். அவற்றின் வளைந்த பகுதி வழியாக பரவும் அழுத்த சக்தி விமானத்தை மேல்நோக்கி எழுப்ப வைக்கிறது. இது “மேலே எழுப்பும் விசை” ஆங்கிலத்தில் லிப்ட் எனப்படும்.
விமானத்தின் வால் பகுதி விமானம் நிலை தடுமாறாமல் மிதந்து செல்வதற்கு ஏற்ற சக்தியை அளிக்கிறது இது” இழுத்துச்செல்லும் விசை” ஆங்கிலத்தில் டிராக் எனப்படும். பிரஸ்ட் லிப்ட் இராக் ஆகிய மூன்று விசைகளின் மொத்த சக்திதான் புவியீர்ப்பு விசை சக்தியை மீறி விமானத்தைப் பறக்க வைக்கிறது