தபால் ஓட்டு நடைமுறை - அரசு அலுவலர்கள் பின்பற்றி தபால் ஓட்டு போட வேண்டும். - Tamil Crowd (Health Care)

தபால் ஓட்டு நடைமுறை – அரசு அலுவலர்கள் பின்பற்றி தபால் ஓட்டு போட வேண்டும்.

 தபால் ஓட்டு நடைமுறை – அரசு அலுவலர்கள் பின்பற்றி தபால் ஓட்டு போட வேண்டும்.

தபால் ஓட்டு நடைமுறையை முறையாக பின்பற்றாததால்,  ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகின. இம்முறையாவது, அரசு அலுவலர்கள், விதிமுறையை பின்பற்றி, தபால் ஓட்டு போடுவரா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு, சுழற்சி முறையில் தேர்தல் பணிகள் வழங்கப்படவுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் தேர்தல் பணி, சொந்த தொகுதியில் வழங்கப்படாமல், மாற்று தொகுதியில் வழங்கப்பட்டால், அவர்கள் தபால் ஓட்டு போட வேண்டியிருக்கும்.

தபால் ஓட்டு போடும் விதிமுறைகளை, அரசு ஊழியர்கள் சரிவர பின்பற்றாததால், செல்லாத ஓட்டுகளாக அவை மாறுகிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இது குறித்து தெரிவித்தபோதும், அவர்கள் அலட்சியமாக இருந்ததால், இது மாதிரியான தவறு நடக்கிறது

  • .உறுதிமொழி படிவத்தை இணைக்காமலும், அதிகாரிகளின் கையொப்பம் இல்லாமலும் அனுப்புவது உள்ளிட்டவற்றை செய்வதால், தபால் ஓட்டு வீணாகிறது.
  •  வேட்பாளரை தேர்வு செய்யும்போது, ‘டிக்’ அடிக்க வேண்டும். ஆனால், சிலர் வட்டமிடுகின்றனர்; 
  • ஸ்வஸ்திக் முத்திரையிடுகின்றனர்.இதுபோன்ற செயல்களால் ஓட்டுகள் ஏற்கப்படுவதில்லை. 

இம்முறை, சரியான விதிமுறைகளை பின்பற்றி, அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போடுவரா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment